Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘DeepFake Edit ‘ வீடியோ பற்றி நாகசைதன்யா கருத்து

‘DeepFake Edit ‘ வீடியோ பற்றி நாகசைதன்யா கருத்து
, செவ்வாய், 7 நவம்பர் 2023 (19:40 IST)
தெலுங்கு, இந்தி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது புகைப்படத்தை மார்பிங் செய்து போலி வீடியோ ‘DeepFake Edit ‘ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  
 

இதுகுறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா ‘’இணையதளத்தில் வைரலாகி வரும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட DeeoFake Edit வீடியோ பற்றி பேசுவதற்கு வருத்தமாக உள்ளது. இந்த ஏஐ தொழில் நுட்பம்  மூலம் இப்படி செய்வது பயமாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகாவின் DeepFake Edit வீடியோ இணையதளத்தில் பரவியதற்கு  அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டீப் ஃபேக் வீடியோ விவகாரம் பற்றி சைதன்யா கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ''தொழில் நுட்பம் தவறாகப் பயன்படுத்துவதை பார்க்கும்போது வருத்தமளிக்கிறது. எதிர்காலத்தில் இவை என்னவெல்லாம் செய்யும் என்ற எண்ணம் இன்னும் பதற வைக்கிறது., இதற்குப் பலியாக இருக்கும் மற்றும் பாதிக்கப்படப்போகும் நபர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை தடுக்கும் வகையில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்த போலி வீடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. அதில், ‘’போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது’’ குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ஒரு சினிமாவே ரிலீஸான தேதியின்று.. .வாழ்த்த சென்றவன் வாயடைத்து நின்றேன்''.- பார்த்திபன்