Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெப்சியை அடுத்து உதவி கோரும் நடிகர் சங்கம்

பெப்சியை அடுத்து உதவி கோரும் நடிகர் சங்கம்
, செவ்வாய், 24 மார்ச் 2020 (20:10 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் அன்றாடம் வேலை செய்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்த சினிமா தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தற்போது குடும்பத்துடன் பசியும் பட்டினியுமாக பெரும் சோகத்தில் உள்ளனர் 
 
பெப்சி தொழிலாளர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக களமிறங்கிய பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி நடிகர் நடிகைகளிடம் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்
 
இந்த வேண்டுகோளை அடுத்து ரஜினி, விஜய் சேதுபதி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்பட பலர் லட்சக்கணக்கில் உதவி செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அரிசி மூட்டைகளும் உதவியாக குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெப்சி அமைப்பை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கமும் நலிவுற்ற நடிகர்களுக்காக உதவி கேட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கொரோனா வைரஸ்‌ நோய்‌ காரணமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே முடங்கியுள்ளது. திடீர்‌ என்று அறிவிக்கப்பட்ட படப்பிடிப்பு தடையால்‌ நடிகர்‌ சங்க உறுப்பினர்களில்‌ துணை நடிகர்கள்‌ . நடிகைகள்‌, அனைத்து மாவட்டத்தை சேர்ந்த நாடக நடிகர்கள்‌ மற்றும்‌ மாதந்தோறும்‌ ஓய்வு உதவி தொகை பெரும்‌ மூத்த கலைஞர்கள்‌ ஆகியோர்கள்‌ தினசரி வாழ்வாதாரம்‌ இன்றி தவித்து வருகின்றனர்‌.
 
நடிகர்‌ சங்கத்தில்‌ 70 சதவீத உறுப்பினர்கள்‌ அன்றாடம்‌ நடைபெறும்‌ சினிமா படப்பிடிப்பு பணிகளையே நம்பி இருப்பவர்கள்.‌ தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு உதவும்‌ பொருட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்‌ சம்மேளனம்‌ பெப்சி சார்பில்‌ இன்று பெரிய நடிகர்களிடம்‌ உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு உதவிகளும்‌ வந்துகொண்டிருக்கின்றன இந்நிலையில்‌ இச்சங்கத்தின்‌ முன்னாள்‌ நிர்வாகிகளும்‌ மற்றும்‌ சில உறுப்பினர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்க தற்போதைய சூழ்நிலையை கருத்தில்‌ கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது
 
இதனை பரிசீலனை செய்யும்போது நமது சங்கத்தில்‌ உள்ள உறுப்பினர்கள்‌ பலரும்‌ வேலை வாய்ப்பின்றி மிகவும்‌ சிரமப்பட்டு வருகிறார்கள்‌ என்பது தெரிய வருகிறது. எனவே அவர்களின்‌ அன்றாட அத்தியாவசிய தேவைகளை புர்த்தி செய்ய வேண்டியதும்‌, அவர்களுக்கு உதவுவதும்‌ நமது தலையாய கடமையாகும்‌. நமது சங்கத்தை சேர்ந்த நல்ல உள்ளம்‌ கொண்ட மனிதநேய பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்‌ கீழ்க்கண்ட நடிகர்‌ சங்க வங்கி கணக்கில்‌ தங்களால்‌ இயன்ற நிதியை வழங்கி உதவிடுமாறு தங்களை அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.
 
இவ்வாறு தனி அதிகாரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு இரண்டே இரண்டு சாய்ஸ் தான்: நடிகை வரலட்சுமி எச்சரிக்கை