பெப்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ 50 லட்சம் நிதி உதவி …
கொரொனா வைரஸ் உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 192 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பல நாடுகளில் லாக் அவுட் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 10 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது. அதேசமயம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக விஜயபாஸ்கர் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
எப்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர், தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு அளித்துள்ளார்.
இதனையடுத்தும் தற்போது, படப்பிடிப்பு முடங்கியுள்ளதால், பெப்சிக்கு உட்பட்ட 24 தொழிலாளர் சங்கங்களில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் தினக்கூலி பணியாளர் பாதிக்கப்படுவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோளை ஏற்று நடிகர் சிவக்குமார் ,சூர்யா குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சன் நிதி உதவி வழங்கினார். நடிகர் விஜய் சேதுபதி ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார். தயாரிப்பாளர் தாணு, 25 கிலோ உடைய 250 மூட்டைகளை பெப்சி அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் 25 கிலோ உடைய 150 அரிசி மூட்டையை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
இவர்களைத் தவிர இளம் நடிகர் , நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.