பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு வெளிமாநிலங்களில் நடப்பதற்கு முடிவு கட்டும் வகையில் பெப்சி ஒரு முடிவை வெளியிட்டுள்ளது.
பெரிய நடிகர்களின் திரைப்படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிமாநிலங்களில் நடப்பதால் தமிழ் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதில் மிக முக்கியமான நபராக சொல்லப்படுவது அஜித் தான். அவர் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தான் நடக்கும். இதனால் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் எல்லாம் தெலுங்கு தொழிலாளர்களுக்கு கிடைக்கின்றன.
இப்படி வெளி மாநிலங்களில் ஷூட்டிங் நடத்துவதற்கு அவர்கள் தரப்பில் சொல்லப்படும் காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். இங்கு எங்கு ஷூட்டிங் நடத்தினாலும் ரசிகர்கள் வந்துவிடுகிறார்கள். அதனால் ஷூட்டிங் பாதிக்கப்படுகிறது. இதையடுத்து பெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி இன்று நடத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்‘அஜித்தோடு பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார்’ எனக் கூறியுள்ளார்.