நானே வருவேன் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார். தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
									
										
			        							
								
																	இந்த படத்துக்காக எந்த ப்ரமோஷனும் செய்யாமல் ரிலீஸ் செய்தனர். அதனால் ரசிகர்களும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று படத்தைப் பார்த்தனர். படத்தின் முதல் பாதி பிடித்துள்ளதாகவும், இரண்டாம் பாதி புரியவில்லை என்றும் சிலரும், பிடிக்கவில்லை என்றும் சிலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தில் தனுஷின் நடிப்பும், யுவனின் பின்னணி இசையும் மட்டுமே படத்தை தூக்கி நிறுத்துவதாகவும் கூறி வருகின்றனர்.