Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 13 January 2025
webdunia

சைக்கோ படத்தில் ஒரு முடியும் இல்ல – மேடையில் ரசிகரைக் கலாய்த்த மிஷ்கின் !

Advertiesment
சைக்கோ படத்தில் ஒரு முடியும் இல்ல – மேடையில் ரசிகரைக் கலாய்த்த மிஷ்கின் !
, வியாழன், 13 பிப்ரவரி 2020 (08:00 IST)
இயக்குனர் மிஷ்கின்

பாரம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய சைக்கோ படம் பற்றி பேசிய ரசிகர் ஒருவரைக் கேவலமாக கலாய்த்துள்ளார்.

இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தேசிய விருது பெற்றுள்ள தமிழ்த் திரைப்படம் பாரம். இந்த படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் ரிலிஸ் செய்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் வெற்றிமாறனின் நண்பர்களான இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் ராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய மிஷ்கின் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அதில் ‘ என்னுடைய சைக்கோ படத்தை ஒரு ரசிகர் ரெண்டு தடவை பார்த்ததாக சொன்னார். அவரிடம் ரெண்டு தடவைப் பார்ப்பதற்கு அந்த படத்தில் ஒரு முடியும் இல்லை. உனக்கு வேலையில்லையா எனக் கேட்டேன்’ எனக் கூறியுள்ளார். மேலும் பாரம் படத்தைப் பற்றி பேசும் போது ‘இன்னைக்கு நான் குடிக்கவில்லை. குடித்திருந்தால் இந்த படத்தின் இயக்குனரின் வீட்டுக்கு சென்று அவர் காலில் விழுந்திருப்பேன்’ எனக் கூறினார்.

முன்னதாக படத்தில் லாஜிக் இல்லை என சொல்லப்பட்ட போது ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை எனக் கூறி சப்பைக்கட்டு கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சர்வர் சுந்தரம்’ படம் அவ்வளவுதானா? அதிர்ச்சி தகவல்!