Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிசிடிவி இல்ல… அதனால என்ன இப்போ ? லாஜிக் குறைகள் பற்றி மிஷ்கின் ஆதங்கம் !

சிசிடிவி இல்ல… அதனால என்ன இப்போ ? லாஜிக் குறைகள் பற்றி மிஷ்கின் ஆதங்கம் !
, புதன், 29 ஜனவரி 2020 (08:04 IST)
சைக்கோ படத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லை என்று எழும் குறைகளைப் பற்றி இயக்குனர் மிஷ்கின் விளக்கமளித்துள்ளார்.

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பரவலான பாராட்டைப் பெற்று வரும் இந்த படம் அதே நேரம் விமர்சனங்களையும் பெறாமல் இல்லை.

இதற்குக் காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள லாஜிக் குறைபாடுகள். முக்கியமாகப் பல கொலைகள் பட்ட பகலில் பொது இடங்களில் நடக்கின்றன. ஆனால் ஒரு இடத்தில் கூட சிசிடிவி காட்சிகள் இல்லையா? என ரசிகர்களும் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் இதற்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் வேளையில் இயக்குனர் மிஷ்கினே தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ’படத்துல சிசிடிவி இல்ல. அதனால் என்ன இப்போ? தியேட்டர்ல கொலை எப்படி பன்றான்னு பாக்காம? ஏன் சிசிடிவி ய தேடுறீங்க. ஒரு கொலைகாரன் கொலை செய்யும் போதோ அல்லது கடத்தும் போதோ அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அப்புறப்படுத்திட்டுதான் செய்வான். அதையெல்லாம் நீங்களேதான் புரிஞ்சுக்கணும். நான் சொன்ன கதை பாதி. மீதிக் கதையை நீங்கள்தான் புரிஞ்சுக்கணும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் ‘நானும் ரெளடிதான்’ கூட்டணி?