Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’அவருடன் நடிப்பது என் கனவு’.... மலையாள நடிகர் ஓபன் டாக்

’’அவருடன் நடிப்பது என் கனவு’.... மலையாள நடிகர் ஓபன் டாக்
, திங்கள், 28 ஜூன் 2021 (20:53 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். ஐம்பது ஆண்டுகளாகச் சினிமாவில் இருந்தாலும் இன்னும் புதிய சிந்தனைகள்,கருத்துகளுடன் மக்களின் ஹீரோவாக அறியப்படுகிறார். அவரது படைப்புகளும் சிலாகித்துப் பேசப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் அடுத்த படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் மலையாள நடிகர் நரேன் நடிக்கவுள்ளார். இவர் கார்த்தி நடித்த கைதி படத்தில் நடித்திருந்த நிலையில் இப்படத்தில் அவர் நடிப்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தின் நடிப்பது குறித்து நடிகர் நரேன் கூறியுள்ளதாவது:  நடிகர் கமலின் நடிப்பைப் பார்த்துத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன்.தற்போது ஒரு படத்தில் அவருடன் நடிப்பது கனவுபோல் இருக்கிறது.  நான் ஏற்கனவே நடித்துவரும் இரண்டு படங்கள் முடியும் நிலையில் உள்ளது. எனவே கமலுடன் நடிக்கும் நாட்களை எதிர்நோக்கி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது ஒரு புதிய படத்தில் ஆட்டிஷம் பாதித்த நபராகவும்,. இன்னொரு தமிழ் படத்தில் நடித்து வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ஷர்வானந்த் 30வது படத்தின் டைட்டில் அறிவிப்பு!