நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னமே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனற ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் கோவையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதால் பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால் அடுத்து விக்ரம் என்ற படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஃப்கத்பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் விக்ரம் படத்தின் முழுத் திரைக்கதையும் முழு மாற்றம் செய்யும்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே பன்முகம் கொண்ட கமல்ஹாசன் இயக்குநர் என்பதால் இதில் அவரது திருப்திக்கு ஏற்ப திரைக்கதையில் இயக்குநர் மாற்றம் செய்யும் வரையில் அவர் அதில், அவரது முழு கவனம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நீண்டகாலம் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இப்பபடத்தை ஹிட் ஆக வேண்டுமென லோகேஷ் படக்குழுவினர் தீர்மானித்துள்ளதால் படம் பிரமாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.