மாஸ்டர் மகேந்திரன் என அழைக்கப்படும் நடிகர் மகேந்திரன் இப்போது சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சாதனை படைத்த குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாகவே ரஜினி, கமல், விஜய்காந்த், அஜித் மற்றும் விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்து 100 படங்களை தாண்டி நடித்தார். ஆனால் வளர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்த போது அவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. அதனால் இப்போது அவருக்கான வாய்ப்புகள் அதிகளவில் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக தனது உடலையும் மெருகேற்றி வருகிறார் மகேந்திரன். சிக்ஸ்பேக்கோடு முரட்டுத் தனமாக அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.