Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முத்தையா முரளிதரனின் பயோபிக்கிற்கு கிடைத்த புது ஹீரோ?

Advertiesment
Muthiah Muralidharan
, திங்கள், 10 ஜனவரி 2022 (16:35 IST)
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் பிரிட்டன் நடிகர் தேவ் படேல் நடிக்கயிருப்பதாக தகவல். 

 
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் ’800’ திரைப்படத்தில் முரளி தரனாக விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டது. ஈழப்படு கொலையின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
 
அரசியல் கட்சிகள், திரைத்துறை, பொதுமக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து வெளியேற வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து விலகினார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் பிரிட்டன் நடிகர் தேவ் படேல் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
 
விரைவில் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்க்கலாம் என நம்புவோம்... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீழ ஒண்ணுமே போடல - முகம் சுளிக்க வைத்த கிரண் ரதோட்!