Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் பந்தை சமாளிக்கதான் தோனி முன்பாக இறங்கினார்… 2011 உலகக்கோப்பை சீக்ரெட் உடைத்த முரளிதரன்!

Advertiesment
முத்தையா முரளிதரன்
, சனி, 21 ஆகஸ்ட் 2021 (11:14 IST)
இந்திய அணி 2011 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.

2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆண்டு. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. அந்த இறுதிப் போட்டியில் தோனி யுவ்ராஜ் சிங்குக்கு முன்னதாக இறங்கியது பலவிதமான விமர்சனங்களையும் கேள்விகளையும் இப்போது வரை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பலரும் விளக்கம் அளித்துவிட்ட நிலையில் இப்போது அந்த போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் விளக்கியுள்ளார். அதில் ‘என் பந்துவீச்சை தோனி அதிகமாக ஐபிஎல் வலைப் பயிற்சிகளின் போது எதிர்கொண்டு இருந்தார். ஆனால் யுவ்ராஜ் என் பந்தைப் பற்றி அதிகம் அறியாதவர். இதனால்தான் தோனி முன்னமே இறங்கி இருக்க வேண்டும் என நினைக்கிறேன் ‘ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னிப்புக் கேட்ட பூம்ரா… அலட்சியப்படுத்திய ஆண்டர்சன் – அதன் பின் நடந்த திருப்பம்!