Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

Prasanth Karthick
ஞாயிறு, 1 ஜூன் 2025 (16:43 IST)

தக் லைப் படத்தில் இடம்பெற்றுள்ள “முத்த மழை” பாடல் குறித்த சமூக வலைதள கருத்துகளுக்கு தீ பதில் அளித்துள்ளார்.

 

கமல்ஹாசன், சிம்பு இணைந்து நடித்துள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார், ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “முத்த மழை” பாடலை தீ பாடியுள்ளார். ஆனால் இசை நிகழ்ச்சியில் இந்த பாடலை சின்மயி பாடினார்.

 

இந்நிலையில் இந்த பாடலின் தீ வெர்ஷன் நன்றாக உள்ளதா? சின்மயி வெர்ஷன் நன்றாக உள்ளதா? என்ற விவாதங்கள் எழுந்துள்ளது. பலர் படத்தில் உள்ள தீ வெர்ஷனை நீக்கிவிட்டு சின்மயி வெர்ஷனை வைக்க வேண்டும் என்று கூட பேசினர். 

 

இதுகுறித்து பேசியுள்ள பாடகி சின்மயி “என்னையும் பாடகி தீயையும் ஒப்பிடுவதே தேவையற்றது. தீயிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர் மிகவும் சின்ன பெண், இன்னும் 15 ஆண்டுகளில் அவர் 50 சின்மயி, 50 ஸ்ரேயா கோஷல்களை எல்லாம் விழுங்கிவிட்டு தனக்கென இடத்தை உருவாக்குவார்.

 

சின்மயி வெர்ஷன், தீ வெர்ஷன் என ஏதோ மல்யுத்த போட்டி போடுவது போல. இது ஒன்றும் போட்டியல்ல. கலைஞராக நாங்கள் மற்றவரின் பணியை கண்டு வியக்கத்தான் செய்வோம்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியை இயக்கும் அனுராக் காஷ்யப்… கதையெழுதும் வெற்றிமாறன்!

சூர்யாவுக்கு தரமான சம்பவம் ரெடியா! ‘கருப்பு’ டீசர் பார்த்த ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் இணைந்த ராணா?... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

இந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆகிறதா ’இந்தியன்3’?… ரிலீஸ் தேதி பற்றி பரவும் தகவல்!

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்.. ரெட் கார்டு விதிக்கப்பட்ட ரவீனா போட்டியா?

அடுத்த கட்டுரையில்
Show comments