Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

26 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்- சல்மான் கூட்டணி இணைகிறதா?

26 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்- சல்மான் கூட்டணி இணைகிறதா?
, சனி, 23 ஜூலை 2022 (16:11 IST)
தர்பார் படத்தின் தோல்விக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் எந்தவொரு படத்தையும் இயக்காமல் உள்ளார்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார் என்று சொல்லப்படுகிறது.

அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம். இந்நிலையில் பாலிவுட்டில் கஜினி வெற்றியால் அவருக்கு நல்ல அறிமுகம் உள்ள நிலையில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வணங்கான் திரைப்படமும் ஓடிடி ரிலீஸா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!