இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் திரைப்படத்துக்கு டங்கி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களை அடுத்து இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு டன்கி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜி வி பிரகாஷ் குமார் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மூலமாக முதல் முறையாக ஷாருக் கான் படத்தில் நடிக்க உள்ளார் டாப்ஸி. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.