Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வணங்கான் திரைப்படமும் ஓடிடி ரிலீஸா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

வணங்கான் திரைப்படமும் ஓடிடி ரிலீஸா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, சனி, 23 ஜூலை 2022 (16:05 IST)
சூர்யா நடிப்பில் பாலா இயக்கிவரும் ‘வணங்கான்’ திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.  இந்நிலையில் வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தீபாவளியின் போது இந்த திரைப்படம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“பிரிவதைத் தவிர வேறு வழியில்லை…” விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா