ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

vinoth
புதன், 26 நவம்பர் 2025 (12:55 IST)
முண்டாசுப்பட்டி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த நடிகர் ராம்தாஸ் அதன் பின்னர் அந்த படத்தில் நடித்த கதாபாத்திரப் பெயரான முனீஸ்காந்த் என்ற பெயராலே அழைக்கபப்ட்டு வருகிறார்.  தொடர்ந்து பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு வரிசையில் தற்போது அவரும் கதாநாயகன் ஆகியுள்ளார். லோகேஷ் குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “விஜய் சாரின் ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். இயக்குனர் வினோத் சாரை சந்தித்து வாய்ப்புக் கேட்டேன். அவரும் எனக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினார். ஆனால் அப்போது நான் வேறு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதால் என்னால் நடிக்க முடியவில்லை. அது பெரிய வருத்தமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன ஏன் தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய ராஜகுமாரன்!

எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

கருப்பு படத் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய ’சூர்யா 46’ தயாரிப்பு நிறுவனம்!

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments