மும்தாஜ்-விஜயலட்சுமி திடீர் மோதல்!

வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (09:38 IST)
பிக்பாஸ் வீட்டின் சண்டைக்காரி என்ற பட்டம் ஐஸ்வர்யாவிடம் இருந்து மும்தாஜூக்கு மாறிவிட்டது போல் தெரிகிறது. தினமும் ஒவ்வொருவரிடம் சண்டை போட்டு வரும் மும்தாஜ் நேற்று செண்ட்ராயனிடம் சண்டை போட்டார். நேற்று கிச்சன் சாம்பியன் பட்டம் பெற்றவுடன் மும்தாஜ் குறித்து செண்ட்ராயன் ஒரு கருத்தை கூற அதை தவறாக புரிந்து கொண்ட மும்தாஜ் அவரிடம் மல்லு கட்டினார். இது பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய முதல் புரமோவில் விஜயலட்சுமிக்கும் மும்தாஜுக்கும் மோதல் வெடிக்கின்றது. மும்தாஜ் செய்த ஒரு தவறை சுட்டிக்காட்டி அவருக்கு அட்வைஸ் செய்த விஜயலட்சுமியை மும்தாஜ் மிக காட்டமாக திட்டுகிறார். இதனால் பதிலுக்கு விஜயலட்சுமியும் பேச இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களுக்கு பேச தெரியவில்லை நிறுத்துங்கள் என்று மும்தாஜ் கூற, உங்களுக்கும் அதேதான் என விஜயலட்சுமி பதிலடி கொடுக்கின்றார்.

மேலும் உங்களுக்கு மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்யும் தகுதி இல்லை என்றும், முதலில் நீங்கள் செய்வதெல்லாம் சரியா? என்பதை பார்த்து கொள்ளவும் என்றும் விஜயலட்சுமி கூறியதுதான் மும்தாஜின் ஆத்திரத்திற்கு காரணமாக உள்ளது. எதுஎப்படியோ கடைசி நேரத்தில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த விஜயலட்சுமி சரியாக கேமை விளையாடுவதால் அவர் மற்ற போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக தெரிகிறார்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அடுத்த வாரம் செமி ஃபைனல்: நேருக்கு நேராக மோதும் ரித்விகா-மும்தாஜ்