என் அம்மா கேட்டால் கூட இதை என்னால் செய்ய முடியாது: மும்தாஜ் அதிரடி

வியாழன், 6 செப்டம்பர் 2018 (13:11 IST)
பிக்பாஸ் 2 வீட்டில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கின்படி, வரும் போன் காலை எடுத்து பேசுபவர் அடுத்த வாரத்திற்கு நேரடியாக நாமினேட் செய்யப்படுகிறார். அதில் இருந்து அவரை காப்பாற்ற சக போட்டியாளர் தியாகம் செய்ய வேண்டும். இதனால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்  காப்பார்றப்படுவார்
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரித்விகாவை காப்பாற்ற  வேண்டுமென்றால் மும்தாஜ் தனது தலைமுடிக்கு பச்சை கலர் அடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஹேர் கலர் பண்ண முடியாது என்று தெரிவித்துவிட்டார். மேலும் மும்தாஜ் என் அம்மா கேட்டால் கூட இந்த டாஸ்கை என்னால் செய்ய முடியாது என்று அதிரடியாக கூறுகிறார்.
 
ஏற்கனவே ஐஸ்வர்யா முடி வெட்டும்போதும், ரித்விகா டேட்டு போடும்போதும், இதை நீங்கள் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பினார் மும்தாஜ். இதனால் அப்போதே மும்தாஜ் முறை வரும்போது அவர் இது போன்ற டாஸ்கை செய்வாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் எங்களை தொந்தரவு செய்யாமல் செய்யுங்கள் : மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்