மும்தாஜூக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடு

வியாழன், 6 செப்டம்பர் 2018 (12:24 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த ஒருசில வாரங்களில் யாரிடமும் ஒட்டாமல் கறாராக இருந்து வந்த மும்தாஜ், பின்னர் திடீரென பாசமழையாக மாறினார். எல்லோரும் வெறுக்கும் ஐஸ்வர்யாவிடம் கூட அவர் அளவுகடந்த பாசத்தை கொட்டினார். இந்த பாசம் எல்லாமே வெறும் நாடகம் என்பது நித்யாவின் ரீஎண்ட்ரிக்கு பின்னர் வெட்ட வெளிச்சமானது

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் வட இந்திய பெண்கள் என்பதால் அவர்களிடம் மட்டுமே தற்போது உண்மையான பாசத்தை காட்டி வரும் மும்தாஜ், ரித்விகா, விஜயலட்சுமியை எதிரியாகவே பார்த்து வருகிறார்

இந்த நிலையில் இன்று ரித்விகா காப்பாற்றப்பட பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை செய்ய மறுக்கின்றார் மும்தாஜ். இதனால் ரித்விகா கொஞ்சம் அப்செட்டில் இருந்த நிலையில் மும்தாஜின் மனதை மாற்ற பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் மும்தாஜ் பிடிவாதமாக இருப்பதால் அவருக்கு எதிராக ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடே திரும்புவது போன்று இன்றைய இரண்டாம் புரமோ வீடியோ மூலம் தெரிய வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா மரணம்...