Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யன் கான் வழக்கை அவசர வழக்காக எடுக்க மும்பை நீதிமன்றம் ஒப்புதல்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (12:06 IST)
போதைப் பொருள் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் ஆர்யன் கானை ஷாருக் கான் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 7 பேர் சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது அவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆர்யன் கானுக்கு அவர் தந்தை சார்பாக வீட்டில் இருந்து உணவு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது. இந்நிலையில் சிறையில் உள்ள காண்டீனில் பொருட்கள் வாங்கிக் கொள்ள சிறைவிதிகளின் படி 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியுள்ளார். மேலும் வீடியோ கால் மூலமாகவும் குடும்பத்தினருடன் ஆர்யன் கான் பேசியுள்ளாராம்.

இந்நிலையில் மும்பை மத்திய சிறையில் இருக்கும் ஆர்யன் கானை ஷாருக் கான் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ஆர்யன் கான் மீதான வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கவெண்டுமென கோரப்பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் எனவும் ஆர்யன் கான் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றம், அடுத்த வாரம் செவ்வாய் கிழமை  அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன செய்யப் போகிறாய் என்று கமல் சார் கேட்பார்?... தக் லைஃப் இசையமைப்பு அனுபவம் பகிர்ந்த ARR!

சூர்யாவின் ரெட்ரோ பட டிரைலரை உருவாக்கியது இந்த இயக்குனர்தானா?... வெளியான தகவல்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூரியின் அடுத்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பு… கவனம் ஈர்க்கும் முதல் லுக் போஸ்டர்!

நாயகன் படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் இணையாதது தவறு- மனம் திறந்து பேசிய கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments