Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகினை பகடைக்காயாக பயன்படுத்தும் மீரா-வனிதா குருப்புகள்

Advertiesment
முகினை பகடைக்காயாக பயன்படுத்தும் மீரா-வனிதா குருப்புகள்
, வியாழன், 4 ஜூலை 2019 (09:00 IST)
பிக்பாஸ் வீட்டில் ஒரே வாரத்தில் இரண்டு குழுக்கள் ஏற்பட்டுவிட்டது என்பது தெரிந்ததே. வனிதா தலைமையில் சாக்சி, அபிராமி, ரேஷ்மா, ஆகியோர்கள் ஒரு குரூப், மதுமிதாவும் மீராமிதுனும் ஒரு குரூப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று முகினும் மீராவும் பேசி கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்ட சாக்சி, அதனை வனிதாவிடம் சென்று பற்ற வைத்துவிட்டதால் பிக்பாஸ் வீடே களேபரமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் முகினை இரண்டு குரூப்புகளும் மாறி மாறி பகடைக்காய் போல் பயன்படுத்த தொடங்கிவிட்டதால் முகின் டென்ஷாகி மீராவை திட்டிவிட்டார். பின்னர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் என்பது வேறு விஷயம்
 
மீரா குறித்தும், மதுமிதா குறித்தும் வனிதா தேவையில்லாமல் சின்ன விஷயத்தை பெரிதாக்கி வீடே இரண்டாக பிளவுபட காரணமாக உள்ளார். இந்த பிரச்சனையில் சிக்காமல் அமைதியாக இருந்த லாஸ்லியாவையும் தனது நரித்தனத்தால் பிரச்சனைகளுக்குல் கொண்டு வந்துவிட்டார் வனிதா. இதனால் லாஸ்லியா கோபித்து கொண்டு செல்ல, அவரை 'மச்சான் மச்சான்' என்று கூறி கவின், சாண்டி ஆகியோர் சமாதானம் செய்தனர்.
 
webdunia
மொத்தத்தில் குரூப் கொடூரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் வனிதா குரூப்பும், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் மதுமிதாவும், மீராவும் இருப்பதால் பிக்பாஸ் வீடு குழாயடி சண்டையை விட மோசமாக உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேர் கொண்ட பார்வை வியாபாரம் ஆகாதது ஏன்? வெளிவராத தகவல்