Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டின் பைத்தியங்கள் - லொஸ்லியாவை திட்டிய வனிதா- கொதித்தெழுந்த ஆர்மிஸ்!

Advertiesment
Bigg boss 3
, புதன், 3 ஜூலை 2019 (15:57 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த ப்ரோமோவில், வீட்டில் இருக்கும் அனைவரையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டு வனிதா மதுமிதாவை மோசமாக திட்டுகிறார். 
 
மதுமிதாவை பார்த்து ஷெரின் சதி சாவித்ரியோட முகமூடி அணிந்து எல்லோரையும் ஏமாத்துறா என குரலை உயர்த்தி திட்டுகிறார். பின்னர் சாக்ஷி அகர்வால் மதுமிதாவை பார்த்து..இப்போ நீ மீராவுடன் பேசுவது பிரச்சனை இல்லையா என கேள்வி எழுப்ப அதற்கு மதுமிதா எனக்கும் மீராவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறுகிறார். உடனே வனிதா, ஷெரின், சாக்ஷி , அபிராமி என அனைவரும் சேர்ந்துகொண்டு மதுமிதாவை கார்னெர் செய்கின்றனர். 
 
இதனை கண்டு கடுப்பான லொஸ்லியா அங்கிருந்து கோபமாக வெளியே எழுந்து செல்கிறார். பின்னர் சம்மந்தமே இல்லாமல் இவ எதுக்கு ரியாக்ட் பண்ணுறா என ஷெரின் கேட்கிறார் அது வனிதா விடுங்க அவளை பெருசு படுத்தாதீங்க இது அவ டாபிக் கிடையாது என்று கூறுகிறார்.
 
இந்த பிரச்சனையில் வனிதா லொஸ்லியவை திட்டியதால்   லொஸ்லியா ஆர்மிஸ்,  "இருடி உன்ன அர்ரெஸ்ட் பண்ணுறதுக்கு ஆல் அனுப்பி வைக்கிறோம்" என்று திட்டி வருகின்றனர். எனவே இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய கலவரம் நடக்கப்போகிறது என்பது தெளிவாக புரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெஸ்லியாவுக்கு "ஐ லவ் யூ" சொன்ன கவின் - வீடியோவை பாருங்க!