Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேர் கொண்ட பார்வை வியாபாரம் ஆகாதது ஏன்? வெளிவராத தகவல்

நேர் கொண்ட பார்வை வியாபாரம் ஆகாதது ஏன்? வெளிவராத தகவல்
, வியாழன், 4 ஜூலை 2019 (09:30 IST)
அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தும் அவருடைய அடுத்த படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் இன்னும் வியாபாரம் ஆகாமல் உள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இன்னும் வியாபாரம் ஆகாமல் இருப்பது பலரை ஆச்சரியம் அடைய செய்துள்ளது. விஜய் ரசிகர்கள் இதுகுறித்து 'போனியாகாத என்.கே.பி' என்று கூட ஹேஷ்டேக் அமைத்து கிண்டல் செய்தனர்.
 
இந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வியாபாரம் ஆகாததற்கு ஒரே காரணம் தயாரிப்பாளர் போனிகபூர் என்று கூறப்படுகிறது. போனிகபூரின் இரண்டு பிடிவாதங்கள் தான் இந்த படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் யோசிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒன்று அஜித் இந்த படத்தில் கிட்டத்தட்ட சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளார். இந்த படத்தின் மெயின் கதை மூன்று பெண்களை தான் சுற்றி நடக்கும், பெரும்பாலான காட்சிகள் இந்த பெண்களை குறித்துதான் இருக்கும். கோர்ட் சீன்கள் மற்றும் ஒருசில ஆக்சன் காட்சிகள் மட்டுமே அஜித்துக்கு இருக்கும் என்பதால் 'விஸ்வாசம்' ரேட்டை கொடுக்க விநியோகிஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் போனிகபூரோ 'விஸ்வாசம்' ரேட் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றாராம்
 
அதேபோல் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி தான் ரிலீஸ் என்பதிலும் போனிகபூர் பிடிவாதமாக உள்ளாராம். ஆகஸ்ட் 10ஆம் தேதி என்பது சனிக்கிழமை என்பதால் இரண்டு நாட்கள் மட்டுமே மாஸ் கலெக்சன் எடுக்க முடியும்.


webdunia
மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 'சாஹோ' ரிலீஸ் ஆவதால் பெரும்பாலான திரையரங்குகள் 5 நாட்களில் கைமாறிவிடும். எனவே 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தை ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை போனிகபூர் பரிசீலிக்க மறுக்கின்றாராம். இந்த இரண்டு பிரச்சனைகளால் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் இன்னும் வியாபாரம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகினை பகடைக்காயாக பயன்படுத்தும் மீரா-வனிதா குருப்புகள்