Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முஃபாசா படம் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கோடி ரூபாய் வசூலா?

Advertiesment
Mufasa the lion king review in tamil

vinoth

, திங்கள், 30 டிசம்பர் 2024 (09:28 IST)
வால்ட் டிஸ்னி படங்கள் என்றாலே குழந்தைகளை நம்பி அழைத்துச் செல்லலாம் என்பதை தாண்டி இந்த படங்களை காண பெரியவர்களுமே ஆர்வம் காட்டுவது உலக அளவில் அதிகரித்துள்ளது. சமீபமாக டிஸ்னி தனது க்ளாசிக் கார்ட்டூன் படங்களான ஜங்கிள் புக், த லயன் கிங் போன்றவற்றை லைவ் ஆக்‌ஷன் படமாக வெளியிட்டு வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள படம்தான் ‘முஃபாசா: தி லயன் கிங்’. தி லயன் கிங் படத்தில் வரும் சிம்பா சிங்கத்தின் அப்பாவான முஃபாசா சிங்கம் எப்படி அந்த காட்டுக்கு அரசன் ஆனது என்ற கதைதான் இந்த முஃபாசா.  அதை டிஸ்னி படங்களுக்கே உண்டான விஷ்வல் ட்ரீட்மெண்டாக கொடுத்துள்ளார்கள்.

கிறிஸ்துமஸை முன்னிட்டு இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்திலும் அரையாண்டு விடுமுறையாக உள்ளதால் குழந்தைகள் அதிகளவில் சென்று இந்த படத்தைப் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை… நடந்தது இதுதான் –மனம் திறந்த இயக்குனர் பாலா!