Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைக்கோ படத்தில் "சிசிடிவி மிஸ்ஸிங்" - உதயநிதி பதிவிட்ட கிண்டலான விளக்கம்!

சைக்கோ படத்தில்
, திங்கள், 27 ஜனவரி 2020 (12:30 IST)
மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வரும் சைக்கோ கதாப்பாத்திரம் "புத்தர்-அங்குலிமாலா"வின் கதையை கருவாக கொண்டுள்ளது என படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
 
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சூப்பர் ஹிட் அடித்தது. டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன் நல்ல வசூலை எட்டியுள்ளது. கூடவே சில பல விமர்சனங்களும்  வந்துகொண்டிருக்கிறது.
 
அதாவது இப்படத்தில் சித்தரிக்கப்பட்ட கொடூர கொலைகள் மற்றும் படத்தின் மையக்கருவான அன்பு ஆகியவற்றை படத்தை பார்த்தவர்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். படத்தில் கொலைகள் நடக்கும் எந்த ஒரு இடத்திலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது எப்படி என கிண்டலடித்து ட்ரோல் செய்து வந்தனர். அப்போது பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நபர் இது குறித்த அரசியல் ரீதியிலான விளக்கத்தை கொடுத்திருந்தார் அந்த மெசேஜ் அதிக அளவில் வைரலானது. அதனை படத்தின் நாயகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதற்கு பல பேர் பல விதமாய் ரிப்ளை செய்துள்ளதை நீங்களே பாருங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில்?