தனி ஒருவன் 2 என்னதான் ஆச்சு?... மோகன் ராஜா கொடுத்த அப்டேட்!

vinoth
புதன், 17 செப்டம்பர் 2025 (07:56 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம். இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்குக் காரணம் என்னவெனத் தெரியவில்லை. இடையில் ரவி மோகன் தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வருவதால் தற்போதைக்குக் கிடப்பில் போட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அருந்ததி படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் மோகன் ராஜா ‘தனி ஒருவன் 2’ பற்றி பேசியுள்ளார். அதில் “நாங்கள் இன்னும் தனி ஒருவன் 2 படத்துக்கான பட்ஜெட்டை நிர்ணயிக்கவில்லை. திரைக்கதையைக் கேட்டபின்னர் தயாரிப்பு நிறுவனம் ‘இப்போது இதற்கு சரியான நேரம் இல்லை. இந்த கதைக்கு நிறைய பட்ஜெட் தேவை. இன்னும் நமது தமிழ் சினிமா பெரிதாக வேண்டும். ’ எனக் கூறினர். தனி ஒருவன் 2 தொடங்குவது தாமதமாகும். ஆனால் கண்டிப்பாக நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments