'லோகா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றி எதிரொலி.. அடுத்தடுத்து 7 பாகங்கள் உருவாகிறதா?

Siva
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (18:54 IST)
மலையாள திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'லோகா' திரைப்படம், அதன் பிரம்மாண்டமான வெற்றியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் ₹30 கோடி செலவில் உருவான இந்தப் படம், உலகளவில் ₹250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, மலையாள சினிமா வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.
 
'லோகா' திரைப்படம் கேரளாவில் மட்டுமல்லாது, தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இங்கு ₹15 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இந்தப் படம், சில நேரடி தமிழ்ப் படங்களின் வசூலை மிஞ்சியுள்ளது. இதன்மூலம், நல்ல கதைக்களம் கொண்ட படங்கள் மொழி எல்லைகளை தாண்டி வெற்றி பெறும் என்பதை 'லோகா' மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
 
படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை கொண்டாடும் வகையில், 'லோகா' திரைப்படத்தை தொடர்ந்து ஏழு பாகங்களாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
'லோகா' திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த தயாரிப்பாளரும், நடிகருமான துல்கர் சல்மான், தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஊதியத்துடன் கூடுதலாக வளைகுடா நாடுகள் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஸ்டைலிஷான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கார்ஜியஸ் கேர்ள் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments