Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லோகேஷின் LCU-ல் இணையும் ரவி மோகன்… பென்ஸ் படத்தில் வில்லனா?

Advertiesment
Ravi Mohan aarti issue

vinoth

, புதன், 27 ஆகஸ்ட் 2025 (10:36 IST)
நடிகர் ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமாவிலும் தற்போது ஒரு தேக்க நிலையில் உள்ளார். அவரின் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வர, அவரது மனைவி ஆர்த்தியையும் விவாகரத்து செய்யவுள்ளார். அது சம்மந்தமான சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ரவி மோகன் தன்னுடைய ‘ரவிமோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரின் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் அறிமுகங்கள் நடந்தன. ரவி தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய படங்களிலும் அந்த வேடத்தில் தொடர்வார் என சொல்லப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி… துபாயில் நடந்த பூஜை!