நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் மோகன் பாபு… கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

vinoth
திங்கள், 29 செப்டம்பர் 2025 (08:39 IST)
இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நானி நடித்த ‘தசரா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அதேக் கூட்டணி ‘தி பாரடைஸ்’ படத்துக்காக இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. சுதாகர் செருகுரி இந்த படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் அறிமுக போஸ்டர் மற்றும் முன்னோட்டம் ஆகியவை வெளியானதில் இருந்தே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பேன் இந்தியா படமாக ‘பாரடைஸ்’ படத்தை எடுத்து வரும் படக்குழுவினர் தற்போது ஹாலிவுட்டிலும் படத்தை வெளியிட முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் மூத்த நடிகர் மோகன் பாபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் அவர் ‘ஷிகஞ்சா மாலிக்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருவழியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘லோகா’… தேதி இதுதான்!

எது நடந்ததோ அது….. நன்றாகவேவா? நடந்தது.. கரூர் சம்பவம் குறித்து இயக்குனர் பார்த்திபன்..

நீங்க அரசியலுக்கு செட்டாக மாட்டீங்கன்னு விஜய்கிட்ட சொன்னேன்! - சர்கார் பட நடிகர் பதிவு!

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

மாளவிகா மோகானின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments