Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடக்கும் மிர்ச்சி சிவாவின் சுமோ… தூசுதட்டும் படக்குழு!

பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடக்கும் மிர்ச்சி சிவாவின் சுமோ… தூசுதட்டும் படக்குழு!
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (14:49 IST)
குழந்தைகளை குறிவைத்து சுமோ என்ற திரைப்படம் உருவாகி சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி காமெடி கலந்த செண்டிமெண்ட்  படமாக உருவாகியிருக்கும் " சுமோ " என்ற படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். "வணக்கம் சென்னை" படத்திற்கு பிறகு பிரியா ஆனந்த் இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரமொன்றில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ நடித்துள்ளார். 

இப்படத்திற்கு நடிகர் சிவாவே திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை முதலில் விடிவி கணேஷ் தயாரிக்க ஆரம்பித்தார். பின்னர் அந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றி முடித்தது. நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் இப்போது அந்த படத்தை மீண்டும் விடிவி கணேஷே கைப்பற்றி வெளியிட உள்ளாராம்.

ஆனால் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதுவும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்போது படத்தை தூசுதட்டி ரிலீஸ் வேலைகளை செய்து வருகிறார்களாம். விரைவில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், சென்சார் முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜ் கேட்ட சம்பளம்… பதிலே சொல்லாமல் சென்ற ஷங்கர்!