Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடிவேலு பகிர்ந்த ''நாய்சேகர் ரிட்டன்ஸ்'' பட புகைப்படம் வைரல்

naisekar returns
, வியாழன், 20 அக்டோபர் 2022 (19:52 IST)
‘’நாய்சேகர் ரிட்டன்ஸ்’’ பட ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வடிவேலு தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகிவருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் வடிவேலு நடிப்பில் ,லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நாய்சேகர் ரிட்டன்ஸ்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, இந்த படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள்  விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரையரங்குகளில் வெளியான பின்னர் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  நடிகர் வடிவேலு தன் டுவிட்டர் பக்கத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி ஆகியோருன் இப்புகைப்படங்களில் உள்ளனர்.

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருத்தன் வாழணும்ன்னா இன்னொருத்தன் சாகணும்: ஜிவி பிரகாஷின் ‘13’ பட டீசர்