அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
 
									
										
			        							
								
																	லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களோடு மிக மோசமான வசூலைப் பெற்று வருகிறது. அமீர்கானின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியாக இந்த படம் அமையலாம் என சொல்லப்படுகிறது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்நிலையில் இந்த படம் சில இணையதளங்களில் பைரஸியாக ஒளிபரப்பாகி வருகிறது. இது சம்மந்தமாக பட தயாரிப்பு நிறுவனமான வயாகாம் 18 அளித்த புகாரின் பேரில் பெங்களூருவில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபப்ட்டவர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தோடு தொடர்பிருக்கலாம் என சொல்லப்படுகிறது.