Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தளபதி 66’ திரைப்படத்தில் இன்னொரு நாயகி இவரா?

thalapathi 66
, செவ்வாய், 24 மே 2022 (16:14 IST)
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகை மெஹ்ரின் பிரஸிதா இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது மெஹ்ரின் பிரஸிதா இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்… பிரபல தயாரிப்பாளரோடு கூட்டணி!