Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“தளபதி 66 படத்துல நான் இல்லை”… அறிவித்த பிரபல தமிழ் நடிகர்!

Advertiesment
மனோபாலா
, வெள்ளி, 13 மே 2022 (16:57 IST)
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் மனோபாலா.

இயக்குனராக அறிமுகமான மனோபாலா ரஜினியின் ஊர்க்காவலன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். நட்புக்காக படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துக் கலக்கியுள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் அவர் தற்போது தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி சமூகவலைதளங்களில் பரவியது.

அதற்குக் காரணம் நடிகர் சரத்குமாருடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்ததுதான். சரத்குமார் தற்போது தளபதி 66 படத்துக்காக ஐதராபாத்தில் இருப்பதால், அந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் மனோபாலாவும் தளபதி 66 படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக நினைத்து பகிரத் தொடங்கினர்.

ஆனால் அதை மறுத்துள்ள மனோபாலா தான் தளபதி 66 படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துள்ளார். மேலும் சரத்குமாரை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் 61 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சமுத்திரக்கனி… கதாபாத்திரம் பற்றி சொன்ன தகவல்!