Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை விமான நிலையத்தில் விஜய்?... வைரல் புகைப்படங்கள்

சென்னை விமான நிலையத்தில் விஜய்?... வைரல் புகைப்படங்கள்
, செவ்வாய், 24 மே 2022 (10:42 IST)
நடிகர் விஜய் தற்போது அவரின் 66 ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் முகாமிட்டிருந்தார்.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. அந்த படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இப்போது படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் பற்றி onboard தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் ‘தளபதி 66’ படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனவும் அந்த போஸ்டர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் விஜய் சில வாரங்களாக ஐதராபாத்தில் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் சென்னைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஏர்ப்போட்டில் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலை படத்தை முடித்த விஜய் சேதுபதி… வெளியான சூப்பர் தகவல்!