Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைது செய்தபோது கதறி அழுத மீரா மிதுன் -வைரலாகும் வீடியோ!'

Advertiesment
meera mithun
, சனி, 14 ஆகஸ்ட் 2021 (17:44 IST)
பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மீரா மிதுன் அதில் தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை கேவலமாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 
 
இந்நிலையில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த மீரா மிதுனை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது கதறி அழுது என்னை கைது செய்தால் கத்தியால் குத்தி கொள்வேன் என கூறி மிரட்டியதோடு  தமிழ்நாடு போலீஸ் தன்னை துன்புறுத்துவதாகவும் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி காப்பாற்ற கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர அவருக்கு மேலும் எதிர்ப்புகள் உருவாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்ட பாவாடையில் கும்முனு போஸ் கொடுத்த சாக்ஷி!