Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது அஜித்துக்கு தெரியுமா? மீண்டும் விஜய்யைக் கலாய்த்த மீரா மிதுன்!

Advertiesment
இது அஜித்துக்கு தெரியுமா? மீண்டும் விஜய்யைக் கலாய்த்த மீரா மிதுன்!
, வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (09:50 IST)
விஜய் ரசிகர்கள் உருவாக்கிய இந்தியாவின் பெருமை அஜித் விஜய் என்ற ஹேஷ்டேக்கை கலாய்த்து மீண்டும் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன்.

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து வருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன். இதற்கு எதிர்வினை ஆற்றும் சம்மந்தப்படட் நடிகர்களின் ரசிகர்களும் ஆபாசத்தை வாரி உமிழ்ந்து வருகின்றனர். இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்கிற ரீதியில் பேசி வருகின்றன.

இந்நிலையில் சில நாட்களாக இந்த பிரச்சனை ஓய்ந்திருந்த நிலையில் இப்போது மீண்டும் தேரை இழுத்து தெருவில் விட்டுள்ளார் மீரா மிதுன். #AjithVijayprideofIndia என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ட்ரண்ட் செய்தனர். அதையடுத்து இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இது அஜித்துக்கு தெரியுமா. ஆம் அஜித் இந்தியாவின் பெருமைதான். ஆனால் உங்கள் நல்ல பெயரை கெடுத்துக்கொண்டு அஜித்தின் புகழை திருடப் பார்க்கிறீர்கள். ஓ இதுதான் கோலிவுட்டின் மாஃபியா செய்யும் வேலையா?’ எனக் கேட்டுள்ளார்.

இதனால் சில நாட்களாக ஓய்ந்திருந்த விஜய் ரசிகர்கள் மற்றும் மீரா மிதுனுக்கு இடையிலான சர்ச்சை மீண்டும் கிளம்ப ஆரம்பித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்ஸ்டாவையும் Ban பண்ண வச்சுடாதம்மா - கவர்ச்சியில் கதறவிடும் யாஷிகா!