Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் இடது கையாளன்… பிரபல இயக்குநரின் நெகிழவைக்கும் பதிவு…

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:44 IST)
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக இடதுகை பழக்கமுடியவர்களின் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இன்று நேற்று நாளை, அயலான் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவிட்டுள்ளார்.

நான் எழுதும்போது, எல்லோரும் பார்த்து, நீ லெஃப்ட் கேண்டா என்று கேட்கும்போது, நான் இடதுகைப் பழக்கம் உள்ளவன் என்பதை நினைவுகூர்வேன் என்றும் நானும் இடதுகைப் பழக்கம் உள்ளவன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய /தமிழ்நாட்டு இடதுகையாளர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் உலக இடதுகையாளர்களுக்கே இருக்காது என்று நம்புகிறேன். ஏனென்றால் இருக்கும் இருகைகளில் இடது கையை தாழ்வாக பார்க்கும் மனநிலை நம்ம ஊரில்தான் இருக்கிறது. இதுபற்றி பண்டைய இலக்கியங்களில் குறிப்பு இருந்தால் சொல்லுங்கள். குறள் கூட ஒன்றும் இல்லை. வருத்தம்தான்.

உணவை இடதுகையால் எடுத்து சாப்பிடும்போதும், பென்சிலை இடது கையால் எடுத்து கிறுக்கும்போதும் அந்த கையில் அடித்து,அடித்து வலதுகைக்கு மாற்றி இளம்பிராயத்திலேயே மூளையை குழப்பிவிடுகிறார்கள். எனக்கும் அதுதான் நடந்தது. இவன் இடதுகைக்காரன் இவனை அப்படியே வளரவிடவேண்டும் என்ற எண்ணம் அப்போது இல்லை. இப்பொழுது கொஞ்சம் புரிதல் ஏற்பட்டிருப்பதாக பார்க்கிறேன். அந்த கரிசனம்கூட இடதுகைக்காரர்கள் ஏதோ பிறப்பிலேயே திறமைசாலிகள் என்ற போலியான எண்ணம் நிலவுவதன் காரணமாத்தான்.

பந்தியில் உணவு பரிமாறும் போது வலதுகையால்தான் உணவு போடவேண்டும் என்று வறுத்தெடுத்து வலதுகையால் ஊற்ற வைப்பார்கள் குறிதவறாமல் இலையில் ஊற்றுவது சாகசம். ஸ்கூல் டைம்ல வலதுகைக்காரர்களுக்கு ஏற்றவாறு லெக் சைடு கிரிக்கெட் விளையாடும்போது எனக்கு எப்பவுமே ஆஃப் சைட் விளையாடவேண்டிய அவஸ்தைதான். இப்படியே சொல்ல ஏராளம்...

இறுதியாக ஒன்றை சொல்ல வேண்டுமன்றால் இடதுகைக்காரர்கள் இரண்டுகைகளையும் ஒன்றுபோல் பாவிக்கும் சமத்துவக்காரர்கள்
#worldlefthandersday #August13
என்று பதிவிட்டுள்ளார்.

 

 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments