Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி,கமல் நடித்த படத்தின் உரிமையை தேடிக் கொண்டிருக்கிறேன் - பிரபல இயக்குநர்

ரஜினி,கமல் நடித்த படத்தின் உரிமையை தேடிக் கொண்டிருக்கிறேன் - பிரபல இயக்குநர்
, வெள்ளி, 5 ஜூன் 2020 (23:11 IST)
கடந்த 1978 ஆம் ஆண்டு ருத்ரய்யா இயக்கத்தில் வெளியான படம் அவள் அப்படித்தான். இப்படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீபிரியா போன்றோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படம் இப்போது ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை பாணா காத்தாடி இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய வுள்ளதாகவும், ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகவும், கமல்ஹாசன் கேரக்கடரில் சிம்பு, துல்கர்சல்மான், போன்றோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநர் கூறியதாவது :

இக்கதையை படமாக்குவதை பெருமையாகக் கருதுகிறேன்.  அதனால் அவள் அப்படித்தான் பட உரிமை யாரிடம் உள்ளது எனறு  தேடி வருகிறேன்.  அவரிடம் இருந்து உரிமையை வாங்கிவிட்டால் அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா தத்தாவின் மிரட்டலான "மிளிர்" போஸ்டர்!