உயர்ந்த மனிதர்கள் நிறையபேர்... இவர் உயர்ந்த தலைவர்... இன்று படித்து பெரிய பெரிய வேலையில் இருப்பவர்கள் எல்லாம் இவர் ஆட்சி காலத்தில் இலவசமாக படித்து பட்டம் வாங்கியவர்கள் தான்.. குழந்தைகளுக்கு மதிய உணவு என்ற திட்டத்தை கொண்டுவந்ததே ஏழையின் ப்ரச்னை என்ன என்பதை அறிந்த இந்த தலைவர்தான் என்று மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜைப் புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் சேரன்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
பாகுபாடற்ற இலவச கல்வி, அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள், பள்ளிக்குழந்தைகளின் ஏற்றதாழ்வை நீக்க சீருடை, அரசு வேலைகளில் திறமையான ஏழைமாணவர்களுக்கு முதலிடம் எல்லாம் சிந்தித்த தலைவன்.. கைநாட்டு போடும் ஏழைகளின் குழந்தைகள் படிக்க ஆசைப்பட்ட தலைவர் வாழ்ந்த நாட்டில் இன்று பெற்றோர் டிகிரி படித்திருந்தால் தான் குழந்தைக்கு பள்ளியில் சீட்டே கிடைக்கும் என்ற நிலை எப்படி வந்தது???.... காமராஜர் காலத்தில் எல்லோரின் வாழ்வும் சிறப்பாக பொற்காலமாக இருந்தது.. வாழட்டும் அந்த தலைவனின் புகழ்.. நன்றி என்று தெரிவித்துள்ளார்.
சேரன் அடுத்து விஜஜ் சேதுபதியை வைத்துப் படம் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.