Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

Advertiesment
Mazhai pidikadha manithan

J.Durai

, வியாழன், 30 மே 2024 (12:58 IST)
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. 
 
இந் நிகழ்வில் இயக்குநர் விஜய் மில்டன் பேசியது ......
 
தனஞ்செயன் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும்தான் இந்தப் படம் தொடங்க முக்கிய காரணம். விஜய் ஆண்டனி சாரை ஹீரோவாக நான் தான் அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஆனால், அது மிஸ் ஆகிவிட்டது. நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். ’மழை பிடிக்காத மனிதன்’ வெறும் ஆக்‌ஷன் படம் மட்டும் கிடையாது. அது பொயட்டிக் ஆக்‌ஷன் ஜானர். இந்த வார்த்தையை தனஞ்செயன் சார்தான் சொன்னார். என்னுடைய எல்லாப் படங்களிலும் கெட்டவன் சாகக் கூடாது. கெட்ட விஷயம்தான் சாக வேண்டும் என்று சொல்வேன். அது இந்தப் படத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். அந்தமான், டையூ என லொகேஷனை போராடி எங்களுக்கு தனஞ்செயன் சார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சார் போன்ற திறமையான நடிகரைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அசத்தினார். சரத்குமார் சாரிடம் நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கும். ‘சூர்யவம்சம்’ காலத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். கதை கேட்டதும் உடனே ஓகே சொல்லி விட்டார். விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், என்னுடைய தொழில்நுட்பக் குழு என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்”.
 
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசியது .....
 
அருமையான படம் செய்துள்ளோம். இயக்குநர், தயாரிப்பாளர், விஜய் ஆண்டனி சார், சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
 
நடிகை மேகா ஆகாஷ் பேசியது .....
 
எல்லா படங்களுமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் படத்தில் லொகேஷன் புதுசாக இருந்தது. நடிப்பதற்கு போகும்போதே பாசிட்டிவாக மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது பெரிய கற்றல் அனுபவம். விஜய் மில்டன் சார் மற்றும் குழுவினருக்கு நன்றி”.
 
நடிகர் சத்யராஜ் பேசியது .....
 
எம்.ஜி.ஆர். அய்யா மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான்  வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய பாக்கியம். இதற்காக விஜய் ஆண்டனி, தனஞ்செயன், விஜய் மில்டன் மூவருக்கும் நன்றி. நல்லவேளை நான் முடியில்லாமல் பிறந்தேன். இதனால்தான் எனக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. கட்டப்பா கிடைத்ததும் அப்படித்தான். சில மைனஸ்தான் பிளஸ். கடவுளுக்கு என்னைப் பிடிக்கும். ஏனெனில், அவரை நான் டிஸ்டர்ப் செய்வதில்லை. எல்லோரையும் போல, ‘என் படம் வெற்றி பெற வேண்டும், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும்’ என்று கெடுபிடி போட மாட்டேன். மற்றப் படங்களைப் போல அல்லாமல், நிஜமாகவே இந்தப் படம் நன்றாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிரேட் மார்க் இருப்பதுபோல, எனக்கு இருக்கும் நக்கல் திரையிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதோடு வில்லத்தனம் கலந்து வந்தால் இனி கொள்கையை தளர்த்தி வில்லனாக நடிக்கலாம் என்று நினைக்கிறேன். என் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட பி. வாசு, பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன் என எல்லா இயக்குநர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்” என்றார். 
 
நடிகர் விஜய் ஆண்டனி பேசியது .....
 
பல மேடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், எல்லாருமே இந்த மேடையில் எல்லோரும் பேசியிருப்பது கவிதை போல மனதில் இருந்து வந்திருக்கிறது. கொரோனா உள்ளிட்டப் பல விஷயங்களைத் தாண்டி விஜய் மில்டன் இந்தப் படத்தை கஷ்டப்பட்டு செய்திருக்கிறார். அவருடைய உழைப்பிற்காக இந்தப் படம் பெரிய வெற்றிப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலருடனும் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. சத்யராஜ் சாருக்கும் எனக்கும் நல்ல கனெக்‌ஷன் உள்ளது. மேகா ஆகாஷூக்கு நல்ல குரல் வளம் உள்ளது. டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் அவர் முயற்சி செய்யலாம். படக்குழுவினர் எல்லோரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள்.
 தயாரிப்பாளர்களுக்கு பெரிய வெற்றிப் படமாக இது அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்”.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு ட்ரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த ராஷிகண்ணா… லேட்டஸ்ட் ஆல்பம்!