தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயார்ப்பு நிறுவனத்தின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
	
	
	தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதலாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஏப்ரலில் வெளியாக இருந்த மாஸ்டர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த மாதத்தில் தீபாவளி வருவதாலும், திரையரங்குகளும் திறக்கப்பட்டிருப்பதாலும் தீபாவளிக்கு “மாஸ்டர்” படத்தை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும், உலகளவில் திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாததால் மாஸ்டர் படத்தை தற்போது வெளியிட வாய்ப்பில்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.