Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விபிஎஃப் நீக்கலைனா படம் ரிலீஸ் கிடையாது! – கட்டையை போடும் பாரதிராஜா!

விபிஎஃப் நீக்கலைனா படம் ரிலீஸ் கிடையாது! – கட்டையை போடும் பாரதிராஜா!
, திங்கள், 2 நவம்பர் 2020 (12:16 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் புதிய படங்கள் வெளியாகாமல் கிடப்பில் கிடப்பதால் திரைத்துறையினர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் விரைவில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது நவம்பர் 10 முதலாக திரையரங்குகளை திறக்கவும், ஆனால் 50 சதவீதம் பார்வையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் திரையரங்குகளை திறக்க பலரும் தயாராகி வரும் நிலையில், பாரதிராஜாவின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பாரதிராஜா “தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விபிஎஃப் எனப்படும் Virtual Print Fee யை நீக்கினால் மட்டுமே படம் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், பாரதிராஜாவின் அறிவிப்பால் பட வெளியீடுகள் மேலும் தள்ளி போகுமோ என ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரரைப் போற்று படக்குழு மீது அதிருப்தியில் வசனகர்த்தா – பின்னணி என்ன?