மாஸ்க் படத்தின் சிலக் காட்சிகளை இயக்கியதே வெற்றிமாறன்தானா?... தீயாய்ப் பரவும் தகவல்!

vinoth
சனி, 1 நவம்பர் 2025 (11:52 IST)
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவின் மேலாளர் இந்த படத்தைத் தயாரிக்கிறார். வெற்றிமாறன் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் படைப்பு ஆலோசகராகவும் செயல்படுகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் ஜி வி பிரகாஷ் முதல் தனிப்பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. அதையடுத்து தற்போது வியாபாரம் தொடங்கியுள்ள நிலையில் டிஜிட்டல் (ஓடிடி+சேட்டிலைட்) உரிமத்தை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சிலக் காட்சிகளை- ஆண்ட்ரியா சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் வெற்றிமாறனே இயக்கியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே இயக்குனருக்கும் கவினுக்கும் இடையே மோதல், கவினுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இடையே மோதல் என்றெல்லாம் செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது. இதை உறுதிபடுத்துவது போல படத்தின் போஸ்டர்களிலும் ‘வாத்தியாராக வெற்றிமாறன்’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

நடிகை சிம்ரன் வெளியிட்ட 'ரெட் லேபிள் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

காதலை நம்பாத ஒருவனின் மாற்றத்தை வெளிப்படுத்துவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது - நடிகர் கவின்

அடுத்த கட்டுரையில்
Show comments