நடிகர் கருணாஸின் மகனான கென்-ஐ தன்னுடைய அசுரன் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகப்படுத்தி பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார் இயக்குனர் வெற்றிமாறன். அதன் பின்னர் அவர் சில படங்களில் நடித்தாலும் மீண்டும் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	மேலும் கென் கருணாஸ் வெற்றிமாறனோடு அதிக நேரம் செலவிட்டு அவருக்கு ஒரு உதவி இயக்குனர் போல பணியாற்றி வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது கென் ஒரு படத்தை இயக்கத் தயாராகியுள்ளார். இந்த படத்தைக் கருணாஸ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் கருணாஸின் வளர்ச்சிக் குறித்து பேசியுள்ள அவரின் தந்தை கருணாஸ் “என் பையனுக்கு நான் சொல்லி இருக்கும் ஒரே அட்வைஸ் என்னவென்றால் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது. எல்லோர்கிட்டயும் நல்ல பேர் வாங்கணும்னு சொல்லிருக்கேன்.அவன் கிட்ட தோத்தவங்க, ஜெயிச்சவங்கன்னு பாகுபாடு பாக்கக் கூடாது என சொல்லிருக்கேன்” என பதிலளித்துள்ளார்.