மாரி செல்வராஜ் மேல் மரியாதை கூடியுள்ளது… இயக்குனர் நடிகர் ப்ரதீப் ரங்கநாதன்!

vinoth
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (15:24 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம்  கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸுக்கு முன்பே இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா இயக்குனர்களும் சேர்ந்து ப்ரமோஷன் செய்தனர். படம் பார்த்த ரசிகர்கள் பகிரும் கருத்துகளும் பாசிட்டிவ்வாக இருப்பதால் படத்துக்கு முதல் மூன்று நாட்களும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது படம் பார்த்துள்ள இயக்குனர் மற்றும் நடிகரான ப்ரதீப் ரங்கநாதன் வாழைப் படத்தைப் பாராட்டியுள்ளார். அதில் “வாழை படத்தைப் பார்க்கும் போது மாரி செல்வராஜ் மேல் மரியாதை அதிகமாகிறது. இந்த கதை அவருடைய வாழ்க்கையில் நடந்தது என்பதை அறியும்போது, அவர் எங்கிருந்து எங்கு வந்திருக்கிறார் என்பது பிரமிப்பாக உள்ளது. அவர் அங்கிருந்து வந்து சினிமாவைக் கற்றுக்கொண்டு அவருக்கு நடந்ததை சொல்லியுள்ளது வியப்பாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹீரோக்களுக்காகதான் கதை… ஹீரோயின்களுக்கு கவர்ச்சி மட்டும்தான்… ராதிகா ஆப்தே ஆதங்கம்!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘Made in Korea’... கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

படிச்சுப் படிச்சு சொன்னேனடா… கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கன்னு – அரசியல் நய்யாண்டியாக கவனம் ஈர்க்கும் ஜீவா பட டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments