முதல் வார இறுதியில் வாழை படத்தின் வசூல் இவ்வளவா?

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (15:51 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம்  கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸுக்கு முன்பே இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா இயக்குனர்களும் சேர்ந்து ப்ரமோஷன் செய்தனர். படம் பார்த்த ரசிகர்கள் பகிரும் கருத்துகளும் பாசிட்டிவ்வாக இருப்பதால் படத்துக்கு முதல் மூன்று நாட்களும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அமைந்தது.

இந்நிலையில் வாழை திரைப்படம் முதல் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னணி நடிகர்கள் இல்லாத படத்துக்கு இவ்வளவு பெரிய வசூல் கிடைத்திருப்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறாரா நடிகை அம்மு? தெருநாய் விவகாரத்தில் பிரபலமானவர்..!

குஷி படத்தை அடுத்து இன்னொரு விஜய் படம் ரீரிலீஸ்.. அதுவும் சூப்பர் ஹிட் படம் தான்..!

பாலிவுட் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நடிகைக்கு ரூ.530 கோடி சம்பளமா? ஆச்சரிய தகவல்..!

கல்கி படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்! பட தயாரிப்பாளர் திடீர் முடிவு! - என்ன காரணம்?

சேலையில் க்யூட்டான போஸில் ஈர்க்கும் கௌரி கிஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments