பாராட்டுகளைக் குவிக்கும் ‘பைசன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

vinoth
சனி, 18 அக்டோபர் 2025 (08:29 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக ‘பைசன்’நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

தமிழகத்தின் தென் மாவட்ட அரசியலை கபடி வீரரான மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையோடு இணைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வழக்கமாக மாரி செல்வராஜின் படங்களுக்கு சாதி ஆதரவாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வரும். ஆனால் இந்த படத்துக்கு ஏகோபித்த நேர்மறையான ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முதல் நாளில் இந்த படம் இந்திய அளவில் சுமார் 2.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று வேலை நாள் என்பதால் இந்த வசூல் இனிவரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments