தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருகிற மே 3ம் ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த படியே கிராம குழந்தைகளுடன் விளையாடுவது , முறுக்கு சுடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு மகிழ்ச்சியாக இருந்துவருகிறார்.
இந்நிலையில் தற்போது தான் இரு வயதாக இருந்தபோது கோவில் ஒன்றில் பஜனை பாடியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு"நான் தான் அப்பவே சொன்னேன்ல.. நான் ஒரு வருஷமா பாட்டு கிளாஸுக்கு போனேன்னு.. யாராவது நம்புனீங்களா.. இப்போ ப்ரூஃப்போட வந்திருக்கேன். இந்த போட்டோ 2009-ல் அசோக்நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் எடுத்தது. கிரீன் ஹாஃப் சாரி காஸ்டியூம்ல இருக்கிறது நான் தான்.. எவளோ நல்லா பாடியிருந்தா.. என்ன பர்ஸ்ட் ரோவில், அதுவும் மைக் முன்னாடி உக்கார வச்சிருப்பாங்க.. நான் பாடகி மணிமேகலை” என்று தெரிவித்திருக்கிறார்.